Montag, 16. Oktober 2017

தமிழ்மொழி

நீண்ட இலக்கிய, இலக்கணப் பாரம்பரியத்தினைக் கொண்டதாகவும், எழுத்து வழக்கு, பேச்சு வழக்கு என்னும் இரு வழக்குகளைக் கொண்டதாகவும் உள்ள மொழி செம்மொழி என்று பொதுவாகக் கூறலாம். 

ஒரு மொழியின் சிறப்புக்கு அம்மொழியின் பழமை வாய்ந்த இலக்கியங்களும் கலைப்படைப்புக்களும் சான்றுகளாக உள்ளன. 

உலகில் பேசப்படுகின்ற மொழிகளில் பல எழுத்துவடிவங்கள் இல்லாமையால் அவற்றைப் பயன்பாட்டிற்குக் கொண்டுவர முடியாமல் உள்ளன.

சில மொழிகள் மிகப் பழமையானவையாகவும் இலக்கியத்தில் சிறந்து விளங்குவனவாகவும் உள்ளன. இவற்றில் கிரேக்கம், இலத்தீன், அரபு, சீனம், ஹீப்ரூ, பாரசீகம், சமஸ்கிருதம், தமிழ் என்னும் எட்டு மொழிகளே செம்மொழிகளாகக் கருதப்படுகின்றன. 

ஏனைய மொழிகளில் சாராததாகவும் தனித்துவம் கொண்டதாகவும் விளங்கும் தமிழ் மொழி செம்மொழியாக அடையாளப்படுத்தப்படுவதில் வியப்பில்லை. 

 தமிழ் மொழி தொல்காப்பியர் காலத்துக்கு முன்பிருந்தே இன்றுவரை எழுத்துவழக்காகவும் பேச்சுவழக்காகவும் பயன்படுத்தப்படுகின்றது. இது தமிழ் மொழிக்குரிய சிறப்பாகும். 

இந்தியாவில் ஆரியம் சார்ந்த பண்பாட்டிற்கு வடமொழி எப்படி விளங்கியதோ அதைப்போலவே திராவிடம் சார்ந்த பண்பாட்டிற்கு தமிழ் மொழி ஆதாரமாக உள்ளது. 

தமிழ் 6000 ஆண்டுகள் இலக்கியப் பழமை வாய்ந்தது என்று கூறப்படுகின்றது. இந்திய வரலாற்றை அறிய தமிழ் மொழி அவசியமானது. 

 சங்க இலக்கியங்கள் தொடக்கம் இன்றுவரை இடையறாத ஒரு நீண்ட இலக்கியப் பாரம்பரியமும், செம்மைசார் இலக்கியமும், நாட்டார் இலக்கியமும் காணப்படுகின்றன. 

தமிழின் செம்மொழித் தகுதிக்கு சங்க இலக்கியங்களான எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்களும் திருக்குறள், தொல்காப்பியம், சிலப்பதிகாரம், மணிமேகலை, முத்தௌ;ளாயிரம், இறையனார் களவியல் உரை போன்ற நூல்களும் உள்ளன. 

 செம்மையான இலக்கிய வளம், விழுமியம், பொதுமை மரபு, உயரிய சிந்தனை, பாரிய சொல்வளம், வரலாற்றுப் பின்னணி, தனித்தியங்கும் மாண்பு, அழிவில்லாத வாழ்வு, காலத்திற்கேற்ற புதுமை, என பல வகையிலும் சிறப்புடைய மொழியாகத் தமிழ் மொழி திகழ்கின்றது. 

அத்துடன் பிற மொழிகளோடு வளமாக வாழ்ந்து தான் சார்ந்த மொழிகள் பல அழிந்த பின்பும்கூட இன்றும் வளத்தோடு வாழுகின்ற ஒரே மொழியாகவும் தமிழ் மொழி காணப்படுகின்றது. 

 இந்தியாவின் பிற எந்த மொழி இலக்கியத்திலும் இல்லாத சிறப்புக் கூறுகளைக் கொண்டதாக எட்டுத்தொகை பத்துப்பாட்டு நூல்கள் உள்ளன. இவை உயரிய இலக்கிய நயமும் வாய்க்கப் பெற்றவையாக அமைந்துள்ளன. உயிர்த்துடிப்புள்ள இலக்கியங்கள் இன்றும் உருவாகும் மொழியாகவும் தமிழ் மொழி உள்ளது. 

 தமிழ் மொழியிலுள்ள திருக்குறள் தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்த்தை அளிப்பதாக உள்ளது. திருக்குறள் சுமார் எண்பது மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட உலக நூலாக உள்ளது. உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல்களில் மூன்றாம் இடத்தை திருக்குறள் வகிக்கிறது. அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்னும் முப்பால்களைக் கொண்டதாகவும் 1330 குறட்பாக்களை உள்ளடக்கியதாகவும் இந்நூல் அமைந்துள்ளது. 

 தமிழ் தொன்மையான மொழி என்பதற்குரிய சான்றுகளுள் தொல்காப்பியம் என்னும் இலக்கண நூலும் அடங்கும். இது தமிழ்மொழிக்கு அழகு சேர்ப்பதாக உள்ளது. பிற இந்திய மொழி இலக்கியங்களுக்கு ஓராயிரம் ஆண்டுக்கு முன்னர் உருவான இலக்கியத்தைக் கொண்டது தமிழ் என்பதற்கு இந்நூலும் துணை புரிகின்றது. 

 சிலப்பதிகாரம், மணிமேகலை, கம்பராமாயணம்,பெரிய புராணம் போன்ற காவியங்களும் தமிழ் ஒரு செம்மொழி என்பதற்கு கட்டியம் கூறுகின்றன. 

இளங்கோவடிகளால் பாடப்பட்ட சிலப்பதிகாரம் சங்கப் பாடலொன்றில் வரும் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டுள்ளது. 

வட மொழி மரபினைத் தழுவி தமிழின் தனித்துவத்திற்கு படைக்கப்பட்ட உன்னத காப்பியமாக கம்பரது கம்பராமாயணம் கணிக்கப்படுகின்றது.

 இந்திய மண்ணுக்குரிய சிறந்த இலக்கிய மரபாக தமிழ் இலக்கிய மரபு மட்டுமே உள்ளது. அத்துடன் சமஸ்கிருதம், இலத்தீன், சீனம், பாரசீகம், அரபு ஆகிய மொழிகளின் இலக்கியங்களில் சிறந்தவற்றுக்கு இணையான தரம் வாய்ந்தது தமிழ்ச் செம்மொழி இலக்கியமாகும். 

பல்வேறு பாடு பொருட்களைக் கொண்டதாகவும் முற்கால இந்திய இலக்கியங்களில் பொதுமைகளைப் பற்றியும் நிறையப் பாடியது தமிழிலக்கியம் மட்டுமே. 

 உலகின் சிறந்த செம்மொழிகளில் தமிழும் ஒன்று என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போலத்தெரிந்த உண்மையாகும். 

பொருளாதார அரசியல் செயற்பாட்டினால் உலகில் ஆங்கிலம் தவிர பிறமொழிகளைத் தடுத்து நிறுத்தத்தக்கதாய் உலகமயமாக்கல் என்னும் பேர் இடர் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது. 

பிற மொழிக்கலப்பை தமிழின் தனித்துவம் கெடாத வகையில் ஏற்று தமிழை செம்மொழியாக, சிறப்புமிக்க மொழியாக வைத்திருப்பது நமது முக்கியமான கடமையாகும்.

தமிழ்பாடநூல் வகுப்பு - 4, பாடம் 22

Mittwoch, 11. Oktober 2017

தமிழ்பாடநூல் வகுப்பு - 4, பாடம் 20

தமிழ் ஒரு செம்மொழி

நீண்ட இலக்கிய, இலக்கணப் பாரம்பரியத்தினைக் கொண்டதாகவும், எழுத்து வழக்கு, பேச்சு வழக்கு என்னும் இரு வழக்குகளைக் கொண்டதாகவும் உள்ள மொழி செம்மொழி என்று பொதுவாகக் கூறலாம். 

ஒரு மொழியின் சிறப்புக்கு அம்மொழியின் பழமை வாய்ந்த இலக்கியங்களும் கலைப்படைப்புக்களும் சான்றுகளாக உள்ளன. 

உலகில் பேசப்படுகின்ற மொழிகளில் பல எழுத்துவடிவங்கள் இல்லாமையால் அவற்றைப் பயன்பாட்டிற்குக் கொண்டுவர முடியாமல் உள்ளன. 

சில மொழிகள் மிகப் பழமையானவையாகவும் இலக்கியத்தில் சிறந்து விளங்குவனவாகவும் உள்ளன. இவற்றில் கிரேக்கம், இலத்தீன், அரபு, சீனம், ஹீப்ரூ, பாரசீகம், சமஸ்கிருதம், தமிழ் என்னும் எட்டு மொழிகளே செம்மொழிகளாகக் கருதப்படுகின்றன. 

ஏனைய மொழிகளில் சாராததாகவும் தனித்துவம் கொண்டதாகவும் விளங்கும் தமிழ் மொழி செம்மொழியாக அடையாளப்படுத்தப்படுவதில் வியப்பில்லை. 

 தமிழ் மொழி தொல்காப்பியர் காலத்துக்கு முன்பிருந்தே இன்றுவரை எழுத்துவழக்காகவும் பேச்சுவழக்காகவும் பயன்படுத்தப்படுகின்றது. 

இது தமிழ் மொழிக்குரிய சிறப்பாகும். இந்தியாவில் ஆரியம் சார்ந்த பண்பாட்டிற்கு வடமொழி எப்படி விளங்கியதோ அதைப்போலவே திராவிடம் சார்ந்த பண்பாட்டிற்கு தமிழ் மொழி ஆதாரமாக உள்ளது. 

தமிழ் 6000 ஆண்டுகள் இலக்கியப் பழமை வாய்ந்தது என்று கூறப்படுகின்றது. இந்திய வரலாற்றை அறிய தமிழ் மொழி அவசியமானது. 

 சங்க இலக்கியங்கள் தொடக்கம் இன்றுவரை இடையறாத ஒரு நீண்ட இலக்கியப் பாரம்பரியமும், செம்மைசார் இலக்கியமும், நாட்டார் இலக்கியமும் காணப்படுகின்றன. 

தமிழின் செம்மொழித் தகுதிக்கு சங்க இலக்கியங்களான எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்களும் திருக்குறள், தொல்காப்பியம், சிலப்பதிகாரம், மணிமேகலை, முத்தௌ;ளாயிரம், இறையனார் களவியல் உரை போன்ற நூல்களும் உள்ளன. 

 செம்மையான இலக்கிய வளம், விழுமியம், பொதுமை மரபு, உயரிய சிந்தனை, பாரிய சொல்வளம், வரலாற்றுப் பின்னணி, தனித்தியங்கும் மாண்பு, அழிவில்லாத வாழ்வு, காலத்திற்கேற்ற புதுமை, என பல வகையிலும் சிறப்புடைய மொழியாகத் தமிழ் மொழி திகழ்கின்றது. 

அத்துடன் பிற மொழிகளோடு வளமாக வாழ்ந்து தான் சார்ந்த மொழிகள் பல அழிந்த பின்பும்கூட இன்றும் வளத்தோடு வாழுகின்ற ஒரே மொழியாகவும் தமிழ் மொழி காணப்படுகின்றது. 

 இந்தியாவின் பிற எந்த மொழி இலக்கியத்திலும் இல்லாத சிறப்புக் கூறுகளைக் கொண்டதாக எட்டுத்தொகை பத்துப்பாட்டு நூல்கள் உள்ளன. இவை உயரிய இலக்கிய நயமும் வாய்க்கப் பெற்றவையாக அமைந்துள்ளன. 

உயிர்த்துடிப்புள்ள இலக்கியங்கள் இன்றும் உருவாகும் மொழியாகவும் தமிழ் மொழி உள்ளது. தமிழ் மொழியிலுள்ள திருக்குறள் தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்த்தை அளிப்பதாக உள்ளது. 

திருக்குறள் சுமார் எண்பது மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட உலக நூலாக உள்ளது. உலகிலேயே அதிக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள நூல்களில் மூன்றாம் இடத்தை திருக்குறள் வகிக்கிறது. 

அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்னும் முப்பால்களைக் கொண்டதாகவும் 1330 குறட்பாக்களை உள்ளடக்கியதாகவும் இந்நூல் அமைந்துள்ளது. 

 தமிழ் தொன்மையான மொழி என்பதற்குரிய சான்றுகளுள் தொல்காப்பியம் என்னும் இலக்கண நூலும் அடங்கும். இது தமிழ்மொழிக்கு அழகு சேர்ப்பதாக உள்ளது. 

பிற இந்திய மொழி இலக்கியங்களுக்கு ஓராயிரம் ஆண்டுக்கு முன்னர் உருவான இலக்கியத்தைக் கொண்டது தமிழ் என்பதற்கு இந்நூலும் துணை புரிகின்றது. 

 சிலப்பதிகாரம், மணிமேகலை, கம்பராமாயணம், பெரிய புராணம் போன்ற காவியங்களும் தமிழ் ஒரு செம்மொழி என்பதற்கு கட்டியம் கூறுகின்றன. இளங்கோவடிகளால் பாடப்பட்ட சிலப்பதிகாரம் சங்கப் பாடலொன்றில் வரும் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டுள்ளது. வட மொழி மரபினைத் தழுவி தமிழின் தனித்துவத்திற்கு படைக்கப்பட்ட உன்னத காப்பியமாக கம்பரது கம்பராமாயணம் கணிக்கப்படுகின்றது. 

 இந்திய மண்ணுக்குரிய சிறந்த இலக்கிய மரபாக தமிழ் இலக்கிய மரபு மட்டுமே உள்ளது. அத்துடன் சமஸ்கிருதம், இலத்தீன், சீனம், பாரசீகம், அரபு ஆகிய மொழிகளின் இலக்கியங்களில் சிறந்தவற்றுக்கு இணையான தரம் வாய்ந்தது தமிழ்ச் செம்மொழி இலக்கியமாகும்.

 பல்வேறு பாடு பொருட்களைக் கொண்டதாகவும் முற்கால இந்திய இலக்கியங்களில் பொதுமைகளைப் பற்றியும் நிறையப் பாடியது தமிழிலக்கியம் மட்டுமே.

 உலகின் சிறந்த செம்மொழிகளில் தமிழும் ஒன்று என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போலத்தெரிந்த உண்மையாகும்.

 பொருளாதார அரசியல் செயற்பாட்டினால் உலகில் ஆங்கிலம் தவிர பிறமொழிகளைத் தடுத்து நிறுத்தத்தக்கதாய் உலகமயமாக்கல் என்னும் பேர் இடர் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது. 

பிற மொழிக்கலப்பை தமிழின் தனித்துவம் கெடாத வகையில் ஏற்று தமிழை செம்மொழியாக, சிறப்புமிக்க மொழியாக வைத்திருப்பது நமது முக்கியமான கடமையாகும்.

Sonntag, 1. Oktober 2017

தொலைக்காட்சி

1)தொலைக்காட்சி என்பது ஒரு தொலைத்தொடர்பு ஊடகம் ஆகும்.

 2)இதன் மூலம் ஒற்றை வண்ண (கறுப்பு-வெள்ளை) அல்லது வண்ணமிகு ஒளிதங்களைப் பரப்பவும் பெறவும் முடியும் 

 3)இது காட்சியின் ஒளி, ஒலியை பதிவு செய்து ஒன்றாக இணைத்து ஒளிபரப்பப்படுகிற விதத்தில் தொகுத்துத் தருகின்றது

. 4) தொலைவில் நிகழும் காட்சிகளைக் கொணர்ந்து காட்டுவதால் தொலைக்காட்சி எனப்படுகிறது. 

 5)தொலைக்காட்சி பார்ப்பதால் நாம் உலகத்தில் நடக்கும் விடயங்களை அறியலாம்.

 6)தொலைக்காட்சியில் சிறுவர்கள் கல்வி சம்பந்தமானவற்றை பார்க்கலாம். 

 7)நாம் தொலைக்காட்சியில் பாட்டுக்களை கேட்டு மகிழலாம்.

 8)விந்தைமிகு விஞ்ஞானத்தின் வளர்ச்சியினால் நாளுக்கு நாள் புதிய பல கருவிகள் கண்டுபிடிக்கப்படுகின்றனமக்கள் வாழ்க்கையை இன்பமயமாக்குவதற்கு அவை பெரிதும் உதவுகின்றன. வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம் ஆகியன விஞ்ஞானத்தின் விந்தைமிகு வெளிப்பாடுகளிற் சிலவாகும். 

 9)உலகின் மிகவும் பலராலும் பார்க்கப்படும் சிறந்த பொழுதுபோக்குச் சாதனமாகும். 

 10)தொலைக்காட்சிகளால் கல்வி சார்ந்த பல விடயங்களை மாணவ்ர்கள், மற்றும் ஆர்வலர்கள் கன்டு மகிழ்கிரார்கள்.சில விடயங்களைக் கற்றுக்கொள்கிறார்கள்.

Samstag, 30. September 2017

Donnerstag, 28. September 2017

Dienstag, 26. September 2017

பாடசாலை

1)பாடசாலை (School) என்பது அடிப்படைக் கல்வி கற்பிக்கும் இடம் எனப் பொருள்படும்.

 2)பொதுவாக தொடக்க நிலை மற்றும் இரண்டாம் நிலைக் கல்விக்கான நிறுவனங்களே பாடசாலைகள் எனப்படுகின்றன.

 3) மாணவர்கள், பல்வேறு நாடுகளிலும் வழக்கத்திலுள்ள கல்வி முறைகளுக்கு அமைவாக 13 தொடக்கம் 14 ஆண்டுகள்வரை பாடசாலையில் கல்வி பயிலுகிறார்கள். 

 4)ஒரு காலத்தில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட குடும்பங்களின் பிள்ளைகள் குருகுலத்திற்கு செல்ல முடியாது. 

5)சமண,புத்த மதங்கள் வளர்ந்தோங்கிய காலத்தில் துறவிகள், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட மக்கள் வசிக்கும் பகுதிக்குச் சென்று தங்களது படுக்கை இருக்கும் பகுதிக்கு கல்வி கற்க குழந்தைகளை அனுப்புமாறு கோரினர். 

தமிழில் படுக்கும் இடத்தைத் தான் பள்ளி என்று அழைத்து வந்துள்ளனர்.

 6)அவ்வாறு முதன் முதலாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட குடும்பங்களின் பிள்ளைகள் நாங்கள் பள்ளிக்குப்போகிறோம் 

 7)அதாவது, சமண, புத்த படுகைகளுக்கு செல்கிறோம் என்று சொன்னதன் வழியாகவே தமிழில் கல்வி கற்கும் இடம் பள்ளி என்றானது

Samstag, 23. September 2017

Donnerstag, 21. September 2017

அப்பா

வியாழக்கிழமை


Samstag, 16. September 2017

அம்மா

சனிக்கிழமை


Donnerstag, 14. September 2017

Montag, 11. September 2017

தமிழ்பாடநூல் வகுப்பு - 4, பாடம் 7

நீர்

நான் கடலில் இருந்துநான் கதிரவனின் வெப்பத்தால்நீராவியாகி மேலெழுந்து சென்று வளிமண்டலம் கடந்து மேகமாக மாறுகிறேன் 

 சின்ன சின்ன துகள்களாக பிரிந்து கிடக்கும் மேகங்களை காற்று உந்துவதனால் திரள் கார்முகில் மேகங்கள் உருவாகின்றேன் 

 அதன் பின்னர் மேகங்களில் இருந்து நீர்  துளிகளாக, திவலைகளாக மாறுகிறேன் 

நீர் துளிகள் எப்போது மேகத்தில் அதிகரித்து அதன் உச்சநிலையை தொடுகின்றதோ அப்போது நான் காற்றின் மின்னோட்டத்தின் உதவியால் மழையாக பொழிய தொடங்குகிறேன்   

மழை நீராக பூமியை வந்து சேர்ந்த எனக்கு எந்தனை பெயர்கள் உனக்கு சொல்லவா காடு அதிகம் இருக்கும் மலை உச்சியில் விழுந்து சொட்டுச் சொட்டாக இணைந்து சிறு "நீரூற்றாக"மாறுகின்றேன் .

சிறு நீரூற்றுகள் இணைந்து "அருவியாக" மாறுகின்றேன் .

மலை உச்சில் இருந்து விழும்போது "நீர்வீழ்ச்சியாக" மாறுகின்றேன் . 

வளைந்து ஓடும் பொது நான் "நதியாக"மாறுகின்றேன் . 

நதியாக ஓடும் என்னை அணைகள் கட்டி அடைத்து வைக்கும் பொது "அணைக்கட்டாக" மாறுகின்றேன் .

இன்னும் எனக்குப் பல பெயர்கள் உண்டு.குளம், குட்டை ,ஏறி ,கண்மாய் என்பது எனது பெயர்.

செவ்வாய்க்கிழமை


Samstag, 9. September 2017

Donnerstag, 7. September 2017

Mittwoch, 6. September 2017

வானொலி


1)இலங்கையின் இலத்திரனியல் தொடர்பாடல் துறைசார் வரலாற்றில் மிகப் புராதன ஊடகமாக காணப்படுவது வானொலி ஊடகமே ஆகும். 

 2)மின்காந்த அலைகளின் வழி செய்தி, அறிவிப்பு, பாடல் மற்றும் உரையாடல் ஒலியலைகளை ஏற்றி வான் வழியே செலுத்தி ஒரே நேரத்தில் தகவல்களை அதிகளவான மக்களுக்கு கொண்டு சேர்க்கக்கூடிய வெகுஜன ஊடகமாக வானொலி திகழ்கின்றது. 

 3)ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோவினால் பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி, உலக வானொலி தினமாக கடந்த 2011 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது.

 4)ரேடியஸ் ( radius) என்ற லத்தீன் மொழியில் பிறந்தது தான் ரேடியோ என மருவியுள்ளது. மார்க்கோனி எனப்படும் குலீல்மோ மார்க்கோனி வானொலியைக் கண்டு பிடித்தவர். ´நீண்ட தூரம் ஒலிபரப்பப் படும் வானொலியின் தந்தை´எனப்படுபவர். கம்பியற்ற தகவல்தொடர்பு முறை´ மற்றும் ´மார்க்கோனி விதி´ஆகியவற்றை உருவாக்கியவர். இக்கண்டுபிடிப்பிற்காக 1909-இல் இயற்பியலுக்கான நோபல் பரிசை கார்ல் பெர்டினாண்ட் பிரவுன் உடன் இணைந்து பெற்றார்.

 5)இவர் ஒரு தொழில் முனைவர், தொழிலதிபர், மற்றும் 1897 ல் ´மார்க்கோனி வானொலி நிறுவனத்தின் நிறுவனர்´, ´வானொலி´ மற்றும் அதனோடு தொடர்புடைய கருவிகளை உருவாக்கியவர். நவீன உலகில் தகவல் தொடர்பு சாதனங்கள், டி.வி.மொபைல் , ஸ்மார்ட்போன், ஐ.பேட், இன்டர்நெட் என பல வழிகளில் தகவல் தொடர்பு அதிகரித்துவிட்டபோதிலும், வெகுஜன ஊடகத்தின் (MASS MEDIA) முன்னோடி வானொலி தான். தகவலை மக்களிடம் விரைவாக கொண்டு சேர்ப்பதில் வானொலியின் பங்கு அளவிடமுடியாதது. 

6)இன்று உலக முழுவதும் லட்சக்கணக்கான வானொலி நிலையங்கள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முந்தைய காலங்களில் பேரிடர் குறித்த தகவல்கள், போர் அறிவிப்புகள் போன்றவற்றினை ஒலிப்பரப்பு வாயிலாக விரைந்து அளித்தது வானொலி. அப்படி இன்றளவும் விரைந்து ஒரு தகவலினை அளிக்கும் சாதனம் ரேடியோ என்றால் அது மிகையாகாது. ஆப்ரிக்கா, ஆசியா, வளைகுடா போன்ற நாடுகளில் இன்று உலக வானொலிதினத்தை கொண்டாடுகின்றனர்.

தமிழ்பாடநூல் வகுப்பு - 4, பாடம் 5

புதன்கிழமை


Dienstag, 5. September 2017

Sonntag, 3. September 2017

Samstag, 2. September 2017

Freitag, 1. September 2017

தமிழ்பாடநூல் வகுப்பு - 4, பாடம் 3

கப்பல்

கப்பல் ஒரு பெரிய கடலோடும் வாகனமாகும். 
சில வேளைகளில், கப்பலில் பல அடுக்குகளும் இருக்கக்கூடும். 
மேலும், கப்பலானது அதற்கு தேவையான அளவு பல்வேறு வகையான படகுகளையும் தன்னகத்தே வைத்திருக்கக் கூடியது உயிர்காப்புப் படகுகள், திருப்புப்படகுகள், இழுவைப் படகுகள் போன்றன இவற்றுள் அடங்கும். "ஒரு படகை கப்பலில் உள்ளடக்க முடியும், ஆனால் கப்பலைப் படகில் உள்ளடக்க முடியாது". என்ற மரபுச் சொல் வழக்கானது ஒரு கப்பலுக்கும், படகுக்கும் இடையிலான அளவு வேறுபாட்டைக் குறிப்பிட்டுக் காட்டுகின்றது இது எல்லாச் சந்தர்ப்பங்களிலும் சரியாக இருக்கும் என்பதற்கு இல்லை. பல்வேறு நாடுகளிலும் உள்ள உள்ளூர்ச் சட்டங்களும், விதிகளும் அளவு,  பாய்மரங்களின்  எண்ணிக்கை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு படகு, கப்பல் என்பவற்றுக்கு இடையிலான வேறுபாடுகளை வரையறுக்கின்றன கப்பல்கள் மற்றும் படகுகள் மனித வரலாற்றுடன் இணைந்து வளர்ந்தது. ஆயுத மோதல் மற்றும் அன்றாட வாழ்வில் அவை நவீன வணிக மற்றும் இராணுவ அமைப்புகளில் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக மாறிவிட்டது. உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மீனவர்களால் மீன்பிடி படகுகள் பயன்படுத்தப்படுகின்றன. இராணுவ படைகள் போர் மற்றும் படைகளின் போக்குவரத்திற்காக இயங்குகின்றன. கிட்டத்தட்ட 35,000 வர்த்தக கப்பல்கள் 2007 ல் 7.4 பில்லியன் டன் எடையுள்ள சரக்கை ஏற்றிசென்றன கப்பல்கள் எப்போதும் வரலாற்றின் கண்டுபிடிப்புகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒரு முக்கிய காரணமாக இருந்தன. கடல்வழி பயணங்களால் தான் திசைகாட்டி, வெடிமருந்து போன்ற கண்டுபிடிப்புகள் பரவியது. கப்பல்கள் காலனித்துவம் மற்றும் அடிமை வர்த்தகம் போன்ற நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வந்தன. 16 ஆம் நூற்றாண்டுக்கு பின்னர், ஐரோப்பிய மாலுமிகள் வழியாக அமெரிக்காவிற்கு வந்த புதிய பயிர்களினால் கணிசமாக உலக மக்கள் தொகை வளர்ச்சியடைந்தது. கடல்வழி போக்குவரத்து இன்றைய உலக பொருளாதார முறையை உருவாக்கியுள்ளது.

வெள்ளிக்கிழமை


Donnerstag, 31. August 2017

Dienstag, 29. August 2017

Sonntag, 27. August 2017

Samstag, 26. August 2017

Donnerstag, 24. August 2017

Dienstag, 22. August 2017

Sonntag, 20. August 2017

Samstag, 19. August 2017

Donnerstag, 17. August 2017

Dienstag, 15. August 2017

Sonntag, 13. August 2017

Samstag, 12. August 2017

Donnerstag, 10. August 2017

Dienstag, 8. August 2017

Sonntag, 6. August 2017

Samstag, 5. August 2017