Montag, 11. September 2017

நீர்

நான் கடலில் இருந்துநான் கதிரவனின் வெப்பத்தால்நீராவியாகி மேலெழுந்து சென்று வளிமண்டலம் கடந்து மேகமாக மாறுகிறேன் 

 சின்ன சின்ன துகள்களாக பிரிந்து கிடக்கும் மேகங்களை காற்று உந்துவதனால் திரள் கார்முகில் மேகங்கள் உருவாகின்றேன் 

 அதன் பின்னர் மேகங்களில் இருந்து நீர்  துளிகளாக, திவலைகளாக மாறுகிறேன் 

நீர் துளிகள் எப்போது மேகத்தில் அதிகரித்து அதன் உச்சநிலையை தொடுகின்றதோ அப்போது நான் காற்றின் மின்னோட்டத்தின் உதவியால் மழையாக பொழிய தொடங்குகிறேன்   

மழை நீராக பூமியை வந்து சேர்ந்த எனக்கு எந்தனை பெயர்கள் உனக்கு சொல்லவா காடு அதிகம் இருக்கும் மலை உச்சியில் விழுந்து சொட்டுச் சொட்டாக இணைந்து சிறு "நீரூற்றாக"மாறுகின்றேன் .

சிறு நீரூற்றுகள் இணைந்து "அருவியாக" மாறுகின்றேன் .

மலை உச்சில் இருந்து விழும்போது "நீர்வீழ்ச்சியாக" மாறுகின்றேன் . 

வளைந்து ஓடும் பொது நான் "நதியாக"மாறுகின்றேன் . 

நதியாக ஓடும் என்னை அணைகள் கட்டி அடைத்து வைக்கும் பொது "அணைக்கட்டாக" மாறுகின்றேன் .

இன்னும் எனக்குப் பல பெயர்கள் உண்டு.குளம், குட்டை ,ஏறி ,கண்மாய் என்பது எனது பெயர்.

Keine Kommentare:

Kommentar veröffentlichen