உயிர் எழுத்துக்கள்
உயிரெழுத்துகள் 12 அவை:
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ
உயிரெழுத்துக்களில் குறுகிய ஓசையுடைய எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ ஆகிய எழுத்துகள் குற்றெழுத்துக்கள்(குறில்) எனவும், நீண்ட ஓசையுடைய எழுத்துக்களான ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ ஆகிய எழுத்துக்கள் நெட்டெழுத்துக்கள்(நெடில்) எனவும் வழங்கப்படும்.
குறிலெழுத்துக்கள் ஒவ்வொன்றையும் ஒரு மாத்திரை நேரத்திலும், நெட்டெழுத்துக்கள் ஒவ்வொன்றையும் இரண்டு மாத்திரை நேரத்திலும் ஒலிக்க வேண்டும்.
பெயர் அகரம் - அ - சொல் - அம்மா
ஆகாரம் - ஆ ஆடு
இகரம் - இ இலை
ஈகாரம் - ஈ ஈட்டி
உகரம் - உ உடை
ஊகாரம் - ஊ ஊஞ்சல்
எகரம் - எ எட்டு
ஏகாரம் - ஏ ஏணி
ஐகாரம் - ஐ ஐந்து
ஒகரம் - ஒ ஒன்பது
ஓகாரம் - ஓ ஓடம்
ஒளகாரம் - ஔ ஒளவை
உயிரெழுத்துக்கள் குறில், நெடில் என இரண்டு வகைப்படும்.
குறில்
குறுகிய ஓசை உடையவை. அவை : அ,இ,உ,எ,ஒ
நெடில்
நெடிய ஓசை உடையவை . அவை : ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஔ
Keine Kommentare:
Kommentar veröffentlichen