(நீரோட்டம்) "வெண்ணையலைந்த ----------கார்மதி மேனி நிறத்துக் ------------" பத்துப்பாடல்கள் (152 -161)
நான்காந் திருமொழி
திண்ணெனெ இவ்விரா உன்னைத் தேய்த்துக் கிடக்கநான் ஒட்டேன்
எண்ணெய்ப் புளிப்பழம் கொண்டுஇங்குஎத்தனை போதும் இருந்தேன்
நண்ண லரிய பிரானே நாரணா நீராட வாராய்
விளக்கம்
கண்ணபிரான் தாரார்தடந்தோள்கள் உள்ளளவும் கைநீட்டி வெண்ணெயளைந்ததனால் உடம்பெல்லாம் அவ் வெண்ணெய்பட்டு மொச்சைநாற்றம் வீசும். அதனோடு விளையாடப் போனால் அதன்மேல் புழுதியும் படியும, இவ்விரண்டும் உடம்பிலிருந்தால் தினவுதின்னும் அதற்காகக் கண்ணன் உடம்பைப் படுக்கையிலே தேய்ப்பானாம், இப்படி எல்லாம் வருந்துவதைப் பொறுக்கமாட்டாமல் நீராடவழைக்கின்றன ளென்க விளையாடுபுழுதி – வினைத்தொகை, விளையாடின புழுதியென விரிக்க, ‘உண்ட இளைப்பு’ என்றவிடத்துப் போல, விளையாடியதனால் தோன்றிய புழுதியென்க. புளிப்பழம் – எண்ணெயைப் போக்குவதாய்ப் புளிப்புச் சுவையுடையதாய் இருக்கின்ற ஒருவகைப் பழத்தைக் குறிக்குமென்பர், சீக்காயைக் காட்டு மென்பாருமுளர். எள் + நெய் = எண்ணெய்.
(153)
கன்றுக ளோடச் செவியில் கட்டெறும் புபிடித் திட்டால்
தென்றிக் கெடுமாகில் வெண்ணெய் திரட்டி விழுங்குமா காண்பன்
நின்ற மராமரம் சாய்த்தாய் நீபிறந் ததிரு வோணம்
இன்று நீநீராட வேண்டும் எம்பிரான் ஓடாதே வாராய்
விளக்கம்
கன்று உண்டானால் பசு கறக்கலாம், பசுவைக் கறந்தால் பாலுண்டாகும், பாலுண்டானால் வெண்ணெயுண்டாகும், ஆகவே, வெண்ணெய் வேணுமென்றால், கன்றுகள் அவசியம் வேணும், அக்கன்றுகள் வெருண்டோடுவதைக் காண்கைக்காக நீ அவற்றின் காதுகளில் கட்டெறும்பைப் பிடித்துப் புகவிட்டால் அவை காணமுடியாதபடி ஓடிப்போய்விடுமே’ பின்பு உனக்கு இஷ்டமான வெண்ணெய் கிடைக்கும்படி யெங்ஙனே? என்பது முதலிரண்டடிகளின் கருத்து. ‘வெண்ணெய் திரட்டி விழுங்குமா காண்பன்’ என்ற தொடர் வெண்ணெய் விழுங்கக் கிடைக்காது என்ற கருத்தைக் காட்டும், இது ஒருவகை எதிர்மறை இலக்கணை, பிற குறிப்பு, ஆ – ‘ஆறு’ என்பதன் விகாரம். (மராமரம் சாய்த்தாய்.) ராமாவதாரத்தில் ரிச்யமூகபர்வதத்தில் ஸுக்ரீவனுக்குத் தன் வலியின் மிகுதியைக் காட்ட ஏழு மராமரங்களை ஒருங்கே எய்தவனென்ற வரலாறு காண்க.
ஆய்ச்சிய ரெல்லாம் கூடி அழைக்கவும் நான்முலை தந்தேன்
காய்ச்சின நீரொடு நெல்லி கடாரத்தில் பூரித்து வைத்தேன்
வாய்த்த புகழ்மணி வண்ணா மஞ்சன மாடநீ வாராய்.
விளக்கம்
‘உனக்கு முலைகொடுத்த பேய்ச்சி பட்டபாட்டை நானறிந்து வைத்தும், நாமும் அப்பாடுபடவேண்டி வரப்போகிறதே என்று அஞ்சி ஓடவேண்டி இருக்க அது செய்யாமல், மற்றும் அச்சமுறுத்துகிற இடைச்சிகளின் பேச்சையும் கேளாமல் உனக்கு நான் முலைதந்தது அன்பினாலன்றோ? அதற்கிணங்க நீ நான் சொல்லிற்றைக் கேட்கவேண்டவோ‘ என்கிறாள். நெல்லி – நெல்லியிலை. காய்ச்சின நீரோடு நெல்லி – நெல்லியோடு காய்ச்சின நீர் என உருபு பிரித்துக் கூட்டப்பட்டது. கடாரம் – கடாஹம். பூரித்த – வடமொழித்தாது வடியாப் பிறந்த வினையெச்சம்.
கஞ்சன் புணர்ப்பினில் வந்த கடிய சகடம் உதைத்து
வஞ்சகப் பேய்மகள் துஞ்ச வாய்முலை வைத்த பிரானே
மஞ்சளும் செங்கழு நீரின் வாசிகை யும்நாறு சாந்தும்
அஞ்சன மும்கொண்டு வைத்தேன் அழகனே நீராட வாராய்.
விளக்கம்
உன் திருமேனிக்கு வேண்டுமவற்றை எல்லாம் சேர்த்து வைத்திருக்கிறேன், நீராட வா என்றழைக்கிறாள். உனது அழகு கெடாதபடி நீ நீராடவேணுமென்பதற்காக அழகனே! என்கிறாள்.
சொப்பட நான்சுட்டு வைத்தேன் தின்ன லுறிதியேல் நம்பீ
செப்பிள மென்முலை யார்கள் சிறுபுறம் பேசிச் சிரிப்பர்
சொப்பட நீராட வேண்டும் சோத்தம் பிரான்இங்கே வாராய்.
விளக்கம்
‘இப்பையல் அழுக்குடம்பனாயிரா நின்றான்’ என்று இடைச்சிகள் ஏசுவதற்கு இடமறும்படி நீராட வருவாயாகில் வேண்டிய பஷணங்கள் தருவேனென்கிறான். அப்பம் – ‘அபூபம்’ என்ற வடசொற்சிதைவு. சிறுமை + உண்டி – சிற்றுண்டி. “ஈறுபோதல்..தன்னொற்றிரட்டல்” “சிற்றுண்டை” என்றும் பாடமாம். (“சிறுபுறம்” என்றவிடத்தில்) சிறு – ‘சிறுமை’ என்ற பண்பினடி. புறம் பேசுதல் – மறைவில் குற்றத்தைச் சொல்லுதல்.
கண்ணைப் புரட்டி விழித்துக் கழகண்டு செய்யும் பிரானே
உண்ணக் கனிகள் தருவன் ஒலிகட லோதநீர் போலே
வண்ணம் அழகிய நம்பீ மஞ்சன மாடநீ வாராய்.
விளக்கம்
- அகத்திலுள்ளார் எல்லாரும் அந்யபரரம்படியாக முதலிலே எண்ணெய்க்குடத்தை உருட்டி, அவர்கள் சிந்திப்போன எண்ணெயை வழிப்பதும் துடைப்பதுமாய் இருக்கையில் அக் காரியத்தைவிட்டு ஓடிவரும்படி – தொட்டிலில் படுத்துத் தூங்கும் குழந்தையைத் தேள் கொட்டினாற்போல வீரிட்டுக் கதறியழும்படி வெடுக்கெனக்கிள்ளி, ஸமீபத்திலே வந்த சிறுவர்களுக்கு அப்பூச்சி காட்டிப் பயப்படுத்தி இப்படி எல்லாம் தீம்பு செய்பவனே! என்றபடி. கண் – இமைக்கு ஆகுபெயர். கண்ணைப்புரட்டி விழித்து – வெளியிற் காணப்படுங் கருவிழி உட்புறமாகும்படி கண்ணை மாறிவிழித்து என்று உரைப்பாருமுள. ‘கழகண்டு’ என்றும் பிரதிபேதம்.
பிறந்தது வேமுத லாகப் பெற்றறி யேன் எம்பிரானே
சிறந்தநற் றாய்அலர் தூற்றும் என்பத னால்பிறர் முன்னே
மறந்தும் உரையாடமாட்டேன் மஞ்சன மாடநீ வாராய்.
விளக்கம்
(சிறந்தவித்யாதி.) ‘மகன் குற்றம் செய்தாலும் மறைக்கும்படி மிகுந்த அன்புடையளான தாயும் இப்படி இவன்மேல் பழிதூற்றினால், இவன் எவ்வளவு துஷ்ட சேஷ்டிதனாயிருப்பனோ’ என்று உன்மேல் பிறர் குறைவாகச் சொல்லப் போகிறார்களோ யென்ற எண்ணத்தினா லென்றபடி.
பின்தொடர்ந் தோடிஓர் பாம்பைப் பிடித்துக் கொண்டாட்டினாய் போலும்
நன்திறத் தேனல்லன் நம்பீ நீபிறந் ததிரு நல்நாள்
நின்றுநீ நீராட வேண்டும் நாரணா ஓடாதே வாராய்.
விளக்கம்
நான்காந் திருமொழி
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்கம்
(152)
வெண்ணெ யளைந்த குணுங்கும் விளையாடு புழுதியும் கொண்டுதிண்ணெனெ இவ்விரா உன்னைத் தேய்த்துக் கிடக்கநான் ஒட்டேன்
எண்ணெய்ப் புளிப்பழம் கொண்டுஇங்குஎத்தனை போதும் இருந்தேன்
நண்ண லரிய பிரானே நாரணா நீராட வாராய்
விளக்கம்
கண்ணபிரான் தாரார்தடந்தோள்கள் உள்ளளவும் கைநீட்டி வெண்ணெயளைந்ததனால் உடம்பெல்லாம் அவ் வெண்ணெய்பட்டு மொச்சைநாற்றம் வீசும். அதனோடு விளையாடப் போனால் அதன்மேல் புழுதியும் படியும, இவ்விரண்டும் உடம்பிலிருந்தால் தினவுதின்னும் அதற்காகக் கண்ணன் உடம்பைப் படுக்கையிலே தேய்ப்பானாம், இப்படி எல்லாம் வருந்துவதைப் பொறுக்கமாட்டாமல் நீராடவழைக்கின்றன ளென்க விளையாடுபுழுதி – வினைத்தொகை, விளையாடின புழுதியென விரிக்க, ‘உண்ட இளைப்பு’ என்றவிடத்துப் போல, விளையாடியதனால் தோன்றிய புழுதியென்க. புளிப்பழம் – எண்ணெயைப் போக்குவதாய்ப் புளிப்புச் சுவையுடையதாய் இருக்கின்ற ஒருவகைப் பழத்தைக் குறிக்குமென்பர், சீக்காயைக் காட்டு மென்பாருமுளர். எள் + நெய் = எண்ணெய்.
கன்றுக ளோடச் செவியில் கட்டெறும் புபிடித் திட்டால்
தென்றிக் கெடுமாகில் வெண்ணெய் திரட்டி விழுங்குமா காண்பன்
நின்ற மராமரம் சாய்த்தாய் நீபிறந் ததிரு வோணம்
இன்று நீநீராட வேண்டும் எம்பிரான் ஓடாதே வாராய்
விளக்கம்
கன்று உண்டானால் பசு கறக்கலாம், பசுவைக் கறந்தால் பாலுண்டாகும், பாலுண்டானால் வெண்ணெயுண்டாகும், ஆகவே, வெண்ணெய் வேணுமென்றால், கன்றுகள் அவசியம் வேணும், அக்கன்றுகள் வெருண்டோடுவதைக் காண்கைக்காக நீ அவற்றின் காதுகளில் கட்டெறும்பைப் பிடித்துப் புகவிட்டால் அவை காணமுடியாதபடி ஓடிப்போய்விடுமே’ பின்பு உனக்கு இஷ்டமான வெண்ணெய் கிடைக்கும்படி யெங்ஙனே? என்பது முதலிரண்டடிகளின் கருத்து. ‘வெண்ணெய் திரட்டி விழுங்குமா காண்பன்’ என்ற தொடர் வெண்ணெய் விழுங்கக் கிடைக்காது என்ற கருத்தைக் காட்டும், இது ஒருவகை எதிர்மறை இலக்கணை, பிற குறிப்பு, ஆ – ‘ஆறு’ என்பதன் விகாரம். (மராமரம் சாய்த்தாய்.) ராமாவதாரத்தில் ரிச்யமூகபர்வதத்தில் ஸுக்ரீவனுக்குத் தன் வலியின் மிகுதியைக் காட்ட ஏழு மராமரங்களை ஒருங்கே எய்தவனென்ற வரலாறு காண்க.
(154)
பேய்ச்சி முலையுண்ணக் கண்டு பின்னையும் நல்லாதுஎன் னெஞ்சம்ஆய்ச்சிய ரெல்லாம் கூடி அழைக்கவும் நான்முலை தந்தேன்
காய்ச்சின நீரொடு நெல்லி கடாரத்தில் பூரித்து வைத்தேன்
வாய்த்த புகழ்மணி வண்ணா மஞ்சன மாடநீ வாராய்.
‘உனக்கு முலைகொடுத்த பேய்ச்சி பட்டபாட்டை நானறிந்து வைத்தும், நாமும் அப்பாடுபடவேண்டி வரப்போகிறதே என்று அஞ்சி ஓடவேண்டி இருக்க அது செய்யாமல், மற்றும் அச்சமுறுத்துகிற இடைச்சிகளின் பேச்சையும் கேளாமல் உனக்கு நான் முலைதந்தது அன்பினாலன்றோ? அதற்கிணங்க நீ நான் சொல்லிற்றைக் கேட்கவேண்டவோ‘ என்கிறாள். நெல்லி – நெல்லியிலை. காய்ச்சின நீரோடு நெல்லி – நெல்லியோடு காய்ச்சின நீர் என உருபு பிரித்துக் கூட்டப்பட்டது. கடாரம் – கடாஹம். பூரித்த – வடமொழித்தாது வடியாப் பிறந்த வினையெச்சம்.
(155)
கஞ்சன் புணர்ப்பினில் வந்த கடிய சகடம் உதைத்து
வஞ்சகப் பேய்மகள் துஞ்ச வாய்முலை வைத்த பிரானே
மஞ்சளும் செங்கழு நீரின் வாசிகை யும்நாறு சாந்தும்
அஞ்சன மும்கொண்டு வைத்தேன் அழகனே நீராட வாராய்.
விளக்கம்
உன் திருமேனிக்கு வேண்டுமவற்றை எல்லாம் சேர்த்து வைத்திருக்கிறேன், நீராட வா என்றழைக்கிறாள். உனது அழகு கெடாதபடி நீ நீராடவேணுமென்பதற்காக அழகனே! என்கிறாள்.
(156)
அப்பம் கலந்த சிற்றுண்டி அக்காரம் பாலில் கலந்துசொப்பட நான்சுட்டு வைத்தேன் தின்ன லுறிதியேல் நம்பீ
செப்பிள மென்முலை யார்கள் சிறுபுறம் பேசிச் சிரிப்பர்
சொப்பட நீராட வேண்டும் சோத்தம் பிரான்இங்கே வாராய்.
‘இப்பையல் அழுக்குடம்பனாயிரா நின்றான்’ என்று இடைச்சிகள் ஏசுவதற்கு இடமறும்படி நீராட வருவாயாகில் வேண்டிய பஷணங்கள் தருவேனென்கிறான். அப்பம் – ‘அபூபம்’ என்ற வடசொற்சிதைவு. சிறுமை + உண்டி – சிற்றுண்டி. “ஈறுபோதல்..தன்னொற்றிரட்டல்” “சிற்றுண்டை” என்றும் பாடமாம். (“சிறுபுறம்” என்றவிடத்தில்) சிறு – ‘சிறுமை’ என்ற பண்பினடி. புறம் பேசுதல் – மறைவில் குற்றத்தைச் சொல்லுதல்.
(157)
எண்ணெய்க் குடத்தை யுருட்டி இளம்பிள்ளை கிள்ளி யெழுப்பிகண்ணைப் புரட்டி விழித்துக் கழகண்டு செய்யும் பிரானே
உண்ணக் கனிகள் தருவன் ஒலிகட லோதநீர் போலே
வண்ணம் அழகிய நம்பீ மஞ்சன மாடநீ வாராய்.
- அகத்திலுள்ளார் எல்லாரும் அந்யபரரம்படியாக முதலிலே எண்ணெய்க்குடத்தை உருட்டி, அவர்கள் சிந்திப்போன எண்ணெயை வழிப்பதும் துடைப்பதுமாய் இருக்கையில் அக் காரியத்தைவிட்டு ஓடிவரும்படி – தொட்டிலில் படுத்துத் தூங்கும் குழந்தையைத் தேள் கொட்டினாற்போல வீரிட்டுக் கதறியழும்படி வெடுக்கெனக்கிள்ளி, ஸமீபத்திலே வந்த சிறுவர்களுக்கு அப்பூச்சி காட்டிப் பயப்படுத்தி இப்படி எல்லாம் தீம்பு செய்பவனே! என்றபடி. கண் – இமைக்கு ஆகுபெயர். கண்ணைப்புரட்டி விழித்து – வெளியிற் காணப்படுங் கருவிழி உட்புறமாகும்படி கண்ணை மாறிவிழித்து என்று உரைப்பாருமுள. ‘கழகண்டு’ என்றும் பிரதிபேதம்.
(158)
கறந்தநற் பாலும் தயிரும் கடைந்துஉறி மேல்வைத்த வெண்ணெய்பிறந்தது வேமுத லாகப் பெற்றறி யேன் எம்பிரானே
சிறந்தநற் றாய்அலர் தூற்றும் என்பத னால்பிறர் முன்னே
மறந்தும் உரையாடமாட்டேன் மஞ்சன மாடநீ வாராய்.
(சிறந்தவித்யாதி.) ‘மகன் குற்றம் செய்தாலும் மறைக்கும்படி மிகுந்த அன்புடையளான தாயும் இப்படி இவன்மேல் பழிதூற்றினால், இவன் எவ்வளவு துஷ்ட சேஷ்டிதனாயிருப்பனோ’ என்று உன்மேல் பிறர் குறைவாகச் சொல்லப் போகிறார்களோ யென்ற எண்ணத்தினா லென்றபடி.
(159)
கன்றினை வாலோலை கட்டிக் கனிக ளுதிர எறிந்துபின்தொடர்ந் தோடிஓர் பாம்பைப் பிடித்துக் கொண்டாட்டினாய் போலும்
நன்திறத் தேனல்லன் நம்பீ நீபிறந் ததிரு நல்நாள்
நின்றுநீ நீராட வேண்டும் நாரணா ஓடாதே வாராய்.
கண்ணபிரான் கன்று துள்ளியொடுவதைக்
காண்கைக்காக அதன் வாலிலே ஓலைகளை முடைந்து விடுவதனால்,’கன்றினை வாலோலை
கட்டி’என்றார்.கன்றினை-உருபுமயக்கம்,[நன்இத்யாதி,] ‘அதைச்செய்தான்இதைச்செய்தான்’என்றிப்படி யெல்லாம் சொல்லுவார் சொல்லக் கேட்டதல்லது,
உன்னுடைய தன்மையை நனைத்தறிதற்கும் எனக்கு முடியாதென்றபடி.
(160)
பூணித் தொழுவினில் புக்குப் புழுதி யளைந்த பொன்மேனிகாணப் பெரிதும் உகப்பன் ஆகிலும் கண்டார் பழிப்பர்
நாணெத் தனையு மிலாதாய் நப்பின்னை காணில் சிரிக்கும்
மாணிக்க மேஎன் மணியே மஞ்சன மாடநீ வாராய்.
விளக்கம்
நீ ஜாதிக்குத் தக்கபடி மாட்டுத் தொழுவிற்
புகுந்து புழுதியளைந்து அழுக்குடம்புடனே இருந்தாலும், உனது மேனி
பொன்னுக்குப் புழுதியேறினாற்போலக் குழந்தைப் பருவத்தினால் விளங்குதலால்
அதைக் காண்பது எனக்கு மிகவும் விருப்பமே, என்றாலும் ‘இவள் பிள்ளை வளர்ப்பது
அழகாயிருக்கிறது!’ என்று கண்டவர்கள் எல்லாரும் என்னைச் சிரிப்பார்களே,
தவிரவும், நப்பின்னையும் உன்னைப் பரிஹாஸம் பண்ணுவாளே, ஆகையால் இப்போது
இருப்பதுபோல நீ வெட்கமற்று நில்லாமல் உடனே நீராட வரவேணுமென்கிறாள். ...
(161)
கார்மலி மேனி நிறத்துக் கண்ண பிரானை யுகந்துவார்மலி கொங்கை யசோதை மஞ்சன மாட்டிய வாற்றை
பார்மலி தொல்புது வைக்கோன் பட்டர் பிரான்சொன்ன பாடல்
சீர்மல செந்தமிழ் வல்லார் தீவினை யாது மிலரே.
விளக்கம்
உகந்து ஆட்டிய ஆற்றைச் சொன்ன பாடல் வல்லார் தீவினையிலர்’ என்று முடிபு காண்க.
அடிவரவு – வெண்ணெய் கன்று பேய்ச்சி கஞ்சன் அப்பம் எண்ணெய் கறந்த கன்றினை பூணி கார் பின்னை.
Keine Kommentare:
Kommentar veröffentlichen